பெங்களூரு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு மின்னல் வேகத்தில் எகிறியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடல் மட்டத்தில் 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையில் 18.21 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீர் மொத்தமும் திறந்து விடப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-discharge-from-kabini-dam-increased-to-30000-cubic-feet-per-second




