டோக்கியோ, ஜப்பான் நாட்டில் மனிதர்களைக் குளிர்விக்கும் நடமாடும் குளிர்சாதப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. எனவே, மனிதர்களை உடனடியாகக் குளிர்விப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த 'டிரஸ்கோ' நிறுவனம் 'டோ ஹியமோன் பாக்ஸ்' என்ற பிரத்யேகக் குளிரூட்டும் அறையை (கூலிங் பூத்) உருவாக்கியுள்ளது. உடனடி குளிர்ச்சி தரும் தொழில்நுட்பம் தீவிர வெயிலில் வேலை செய்பவர்கள் இந்த அறைக்குள் நுழைந்த 5 நிமிடங்களில் தங்கள் உடல் வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். மேலும், இந்த சாதனத்தின் உட்புறம் 15°C வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக, பயனரின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதிகளுக்கு 5°C அளவில் குளிர்ந்த காற்று நேரடியாக பரவச் செய்து, உடல் சூட்டை அதிவேகமாகத் தணிக்கிறது. தொழிலாளர்களுக்கான பிரத்யேக வடிவமைப்பு இது தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை எந்த இடத்திற்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தலாம். பயனரின் உடல் அதிகக் குளிர்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, இதில் சிறப்புப் பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த குளிரூட்டும் பெட்டி அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக இயங்கும், அதன் பிறகு தானாகவே ஆஃப் ஆகிவிடும். குறைந்த மின்சாரச் செலவு மற்றும் விலை இது வழக்கமான ஏ.சியை விட மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. ஒரு மணி நேரம் இயக்க வெறும் ரூ.9.5 மட்டுமே மின்சாரச் செலவாகும். வணிக ரீதியான பயன்பாட்டிற்கான இந்த சாதனத்தின் விலை 1.5 மில்லியன் ஜப்பானிய யென் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சம்) ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/do-you-know-what-the-new-invention-in-japan-is-that-cools-people-down




