தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்தார். அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைத்தான் சாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள். இந்த நிலையில், பத்தா திரைப்பட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி விஜய் குறித்துப் பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் யாருக்கும் பாமக ஆதரவு இல்லை!" - அன்புமணி 'ட்விஸ்ட்' விஜய் சேதுபதி மேடையில் பேசும் போது, “சஞ்சய் பிறந்தநாளுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லியிருந்தேன். அப்போ, அவர் (விஜய்) எனக்கு போன் பண்ணி, ‘ரொம்ப நன்றி நண்பா. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்’னு சொன்னார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. ஏன்னா, அவரே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவர் மகன் சஞ்சய்க்கு என்னைப் பிடிச்சிருக்குங்கறது எனக்குப் பெரிய ஆச்சர்யம். நான் அவனிடமே கேட்டேன். ‘என்னடா உன் வீட்டிலேயே எவ்வளவு பெரிய ஆள் வச்சிருக்க’னு. அவன் ரொம்ப தங்கமான பையன். அவனோட படமும் இங்கே நம்ம படத்தோடு வருது. அவன் ஷூட் பண்ணும்போது நான் அவன் செட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். ரொம்ப கியூட் ஃபெல்லோ அவன். அப்போ என்னோட ஃபிரெண்ட் ரோகன் ஜனநாயகன் படத்தில் நடிச்சுட்டு இருந்தான். நான் சஞ்சய் செட்டுக்குப் போனது தெரிஞ்சதும், ரோகனைக் கட்டுப்பிடிச்சு, நான் இதைக் கொடுத்ததா சொல்லுன்னு சொல்லி அனுப்பினார் அவர். அது அவரோட அன்பு” என்று கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/vijay-sethupathi-praises-vijay-after-bigg-boss-controversy




