சென்னை, நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள், பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். இந்த நிலையில், மிலாடி நபி பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகள். மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம். இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/may-this-auspicious-milad-un-nabi-bring-happiness-and-prosperity-chief-minister-vijay



