ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் சமூகநீதி விடுதியில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் சமூகநீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள மாணவிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என அமைச்சர் சம்பத்குமாருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் அமைச்சர் சம்பத்குமார் விடுதிக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். புகார்கள் மாணவிகளிடம் உணவு வழங்கப்படும் முறை, மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணியிட மாற்றம் இதைத்தொடர்ந்து, விடுதி வார்டனை அமைச்சர் எச்சரித்தார். மேலும், விடுதியில் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், வார்டனை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். வாட்ஸ்அப் மூலம் வந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-on-whatsapp-complaint-minister-sampath-kumar-conducts-surprise-inspection-at-hostel




