புதுடெல்லி, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- ஆதார் செயலி 4 கோடி (40 மில்லியன்) பதிவிறக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. இது வசதியான மற்றும் டிஜிட்டல் அடையாள சேவைகளின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. டிஜிட்டல் தளம் ஆதார் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு, வீட்டிலிருந்தபடியே முகவரி புதுப்பிப்பு, கைபேசி எண் புதுப்பிப்பு, மின்னஞ்சல் புதுப்பிப்பு, பயோமெட்ரிக் மற்றும் இ-ஆதார் பதிவிறக்கம் உள்ளிட்ட பலதரப்பட்ட ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக அது உருவெடுத்துள்ளதை பிரதிபலிக்கிறது. 49 லட்சம் தெலைப்பேசி எண் அதன் தொடக்கத்திலிருந்து, ஆதார் செயலி 11.65 லட்சம் முகவரி புதுப்பிப்புகளை எளிதாக்கியுள்ளது, இது ஆதார் மையத்திற்கு செல்லாமல் தங்கள் ஆதார் விவரங்களை வசதியாக புதுப்பித்து கொள்ள உதவுகிறது. இந்த செயலி கிட்டத்தட்ட 49 லட்சம் தெலைப்பேசி எண் புதுப்பிப்புகளையும் செயல்படுத்தியுள்ளது, இது மக்கள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட துல்லியமான தொடர்பு தகவலை பராமரிக்க உதவுகிறது. டிசம்பர் 31 வரை இலவசம் ஜூலை 1 அன்று மின்னஞ்சல் புதுப்பிப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஆதார் செயலி மூலம் சுமார் 12.5 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கும் இடையிலான தகவல்தொடர்பை, பொருந்தக்கூடிய இடங்களில், மேலும் வலுப்படுத்துகிறது. முன்பு ரூ. 75 கட்டணம் கொண்ட இந்த அம்சம், ஆதார் செயலியில் 2026 டிசம்பர் 31 வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 1.91 கோடி முறை இந்த செயலியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் வலுவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பயோமெட்ரிக் வசதியை 1.91 கோடி (19.1 மில்லியன்) முறைக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர். இந்த அம்சம், ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு தங்களின் தனிப்பட்ட தகவல்களின் மீது அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/aadhaar-mobile-app-crosses-40-million-downloads




