ஹாலிவுட் ரசிகர்களை கவர்ந்த 'ராக்கி' திரைப்படம் உருவான பின்னணியில் 'ஐ பிளே ராக்கி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில், இளம் சில்வெஸ்டர் ஸ்டலோன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆந்தனி இப்போலிட்டோ நடித்துள்ளார். தனது வாழ்க்கையை மாற்றியமைத்த 'ராக்கி' கதையை எழுதிய ஸ்டலோன், அதில் தானே கதாநாயகனாக நடித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் பீட்டர் பாரெல்லி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஸ்டலோனின் முதல் மனைவி சாஷா சாக் கதாபாத்திரத்தில் அன்னா சோபியா ராப், கார்ல் வெதர்ஸ் கதாபாத்திரத்தில் ஸ்டீபன் ஜேம்ஸ், ஸ்டலோனின் தந்தை பிராங்க் ஸ்டலோன் சீனியர் கதாபாத்திரத்தில் மாட் டில்லன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். 1976-ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி', உலக சினிமாவின் மிகச் சிறந்த விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/first-look-trailer-of-the-movie-i-play-rocky-released




