சென்னை, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார். கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது. இதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்? மேகதாது அணை குறித்து விவாதிக்க தவெக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். குறுவை சாகுபடி விவாசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-has-the-tvk-government-taken-regarding-the-mekedatu-issue-udhayanidhi-asks




