சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'கர' திரைப்படத்தைத் தொடர்ந்து, 'அமரன்' படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் 'ஓம்' வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் 16-ல் ரிலீஸ் சமீபத்தில் வெளியான 'ஓம்' படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலேசியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த நிலையில், 'ஓம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது. தனுஷ் மற்றும் மம்முட்டி தொடர்பா காட்சிகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகறது. இந்த இறுதி கட்ட பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த படத்துக்கு தயாராகும் தனுஷ் 'ஓம்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்த பிறகு, நடிகர் தனுஷ் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தனுஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/good-news-for-dhanush-fans-the-final-schedule-of-om-has-started




