நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேசிங் களத்தில் அவர் சந்தித்த சவால்களையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணத் திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரேசிங் உலகின் உண்மை தருணங்கள் ஆவணப்படத்தில் இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளில் அஜித் பங்கேற்ற தருணங்கள் இதில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது. சவால்கள் முதல் சாதனை வரை. ரேசிங் களத்தில் அஜித் எதிர்கொண்ட சவால்கள், பின்னடைவுகள், கடினமான தருணங்கள் மற்றும் 2025 துபாய் 24H போட்டியில் அவர் போடியம் வென்ற வரலாற்றுச் சாதனை வரை அவரது முழுமையான சர்வதேச ரேசிங் பயணம் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தியாவின் முன்னணி பார்முலா-1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட பல சர்வதேச ரேசிங் பிரபலங்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியீடு இந்த நிலையில், ஆவணப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ரேசிங் உலகில் அஜித் படைத்த சாதனைகளையும், அவர் கடந்து வந்த போராட்டங்களையும் பெரிய திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முதல்கட்ட பணிகளும் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ajith-kumars-gladiators-documentary-film-release-update




