திருவள்ளூர், பெண் பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. பாலியல் பலாத்காரம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 54 வயது பெண். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி செண்ணாங்காரணி கிராமத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அன்று இரவு 8 மணியளவில் வீட்டின் அருகே சென்றார். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவரால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இரட்டை ஆயுள் தண்டனை இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 24) என்பவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கடம்பத்தூர் ஜெய்கணேஷ் வாதாடினார். சாட்சியங்கள் விசாரணை முடிந்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 16 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/double-life-imprisonment-for-young-man-in-rape-case




