புதுச்சேரி, புதுச்சேரியில் ஜனாதிபதியின் வண்ணக்கொடி வழங்கும் விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது; புதுச்சேரி காவல்துறை முதலிடம் ”கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு செயலாற்றும் புதுச்சேரி காவல்துறையினர், வெறும் 5,000 பேர் மட்டுமே இருப்பினும் சட்டம்-ஒழுங்கை மிகச் சிறப்பாக பாதுகாத்து மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துள்ளனர். இவர்களின் அசாத்திய வீரமும் தியாகமுமே இந்த உயரிய விருதுக்குக் காரணமாகும். மக்களுக்கான சேவையில் நமது காவல்துறை எப்போதும் முதலிடத்தில் திகழ்வது பெருமைக்குரியது." கடினமான உழைப்பு அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றை அளித்து வரும் காவல்துறையினருக்கு குடியரசு தலைவரின் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், யூனியன் பிரதேசங்களை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரிக்கு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளும் வளர்ச்சித் திட்டங்களும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் தகவல்களை கேட்டபோது, புதுச்சேரி காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தை பெற்றது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அச்சமின்றி துணிச்சலான மனதுடன் காவலர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சாகச நிறை மனதோடு பணி புரிந்திருக்கிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளாகவே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசம் மேம்பட வேண்டும் என்பதுதான். குறிப்பாக புதுச்சேரிக்கு பிரதமர் மோடி அரசாங்கம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது 12 ஆண்டுகளில் 13,762 கோடி 1963-ல் டிஜிபி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து புதுச்சேரி காவல்துறை மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1950 முதல் 2014 வரை மத்தியிலிருந்து குறைந்த அளவிலான நிதியே அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2014 முதல் 2026 வரையிலான 12 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ரூ.13,762 கோடியை வழங்கி புதுச்சேரியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது." இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/puducherry-police-ranks-first-in-serving-the-public-amit-shah-praises




