புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கொலை வழக்கு புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான காக்கா(எ) கருணாஸின் குற்றத்தை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்டின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கருணாஸின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. அதே நேரத்தில், குற்றத்தின் தன்மை மற்றும் குற்றவாளி தொடர்பான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும், இந்த வழக்கில் புதுச்சேரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்ட விசாரணையை நீதிபதிகள் பாராட்டினர். வழக்கை விரைவாகவும், முழுமையாகவும், கவனமாகவும் விசாரித்ததற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி ஆஜராகினர். குற்றவாளி தரப்பில் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவன் மற்றும் அவரது குழுவினர், வழக்கறிஞர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/minor-girl-rape-and-murder-case-in-puducherry-convicts-death-sentence-reduced-to-life-imprisonment




