தைபேய் சிட்டி, சீன தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தைபேய் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீராங்கனை தன்வி ஷர்மா, 24-ம் நிலை வீராங்கனையான ஹூயாங் யு ஹூனை (சீன தைபே) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த 17 வயதான தன்வி ஷர்மா 21-17, 21-11 என்ற நேர்செட்டில் ஹூயாங்கை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 33 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 28-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 15-21, 18-21 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீராங்கனையான துய்லின் நுயெனிடம் (வியட்நாம்) பணிந்து நடையை கட்டினார். இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் தன்வி ஷர்மா - துய்லின் நுயென் மோதுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/chinese-taipei-open-badminton-indian-shuttler-tanvi-sharma-reaches-final




