கிளாஸ்கோ, 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. குத்துச் சண்டையில் 10 பிரிவுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கமும், 3 வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது. முன்னதாக சாக்ஷி, பிரீத்தி, ஜேஸ்மின், பிரியா, அருந்ததி சவுத்ரி மற்றும் சச்சின் சிவாச் ஆகியோர் தங்கம் வென்றனர். ஜடுமணி சிங், லவ்லினா இருவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்த நிலையில் ஆண்கள் 80 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அங்குஷ் பங்கல் தங்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரரை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அங்குஷ் பங்கல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் 90 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச் சண்டை அணி 7 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று குத்துச் சண்டை பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் ஆண்கள் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 13 நிமிடங்கள் 24.95 வினாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/commonwealth-games-ankush-panghal-shines-india-wins-7-boxing-golds




