சென்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளநிலையில், கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கை பாதையில் தொடர்ந்து முன்னேறிச செல்வோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:- தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை. “ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-victory-the-dmk-has-not-witnessed-nor-any-defeat-it-has-not-faced-kanimozhi




