சென்னை, கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெட்டிக் கொலை கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (37). இவர் கோவை மாவட்ட இந்து முன்னணி பேச்சாளராகப் பணியாற்றினார்.இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின தேசிய புலனாய்வு முகமை ஆரம்பத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் விசாரித்த இவர்களது வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டிக்கு (CB-CID) மாற்றப்பட்டது பின்னர் இவ்வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுபைர் உள்ளிட்டோர் மீது என்.ஐ.ஏ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பயங்கரவாத பீதியை ஏற்படுத்தி ஒரு பிரிவினர் மத்தியில் கலவரத்தை உண்டாக்க இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக என்.ஐ.ஏ குறிப்பிட்டது. ஆயுள் தண்டனை இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில், சதாம் உசேன், சுபேர், முபாரக், ரபிக் அல் ஹாசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று (25.09.2026) தீர்ப்பு வழங்கி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-hindu-munnani-functionary-murder-case-life-imprisonment-for-four-people



