சென்னை. தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில், மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். முதுகலை மருத்துவ மாணவியாக தமிழக பாஜகவில் சேர்ந்த போது அவரதுசிறந்த பேச்சாற்றல் மற்றும் தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விதி எனக்கு ஒரு மிகுந்த வேதனையான அதே நேரத்தில் பெரும் பாக்கியமான பொறுப்பை வழங்கியது. பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த நான், அன்றைய தேசியத் தலைவர் அமித் ஷா அவர்களிடமிருந்து, நமது பிரதமர் நரேந்திரமோடியின் முன்னிலையில், வாஜ்பாய் அவர்களின் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் புனிதமான வாய்ப்பைப் பெற்றேன். மேலும், பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்யும் பெரும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது. உணர்வுபூர்வமான இந்த நிகழ்வுகள் என் வாழ்வில், என்றும் மறக்க முடியாத அத்தியாயமாகும். வாஜ்பாய் அவர்கள் நம் இதயங்களில் வாழ்கிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-death-anniversary-tamilisai-soundararajans-tribute




