ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்தநாள் விழா நிகழ்வில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று, 11,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், அமைச்சர் செங்கோட்டையன் அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணி காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார். அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள்கூட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களைப் போல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில்கூட விஜய் அவர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/governance/minister-sengottaiyan-speech-about-cm-joseph-vijay




