கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். பலி எண்ணிக்கை இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,186 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது. இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/ebola-death-toll-surges-in-congo-past-3000



