திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் சேந்தி பகுதியை சேர்ந்தவர் அனில். காங்கிரஸ் பிரமுகரான இவர் சேந்திபகுதி நாராயண குரு கலாசார அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் நாராயண குரு பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவை முதல்-மந்திரி வி.டி.சதீசன் தொடங்கி வைக்க வேண்டும் என அமைப்பு சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அருகில் செம்பழந்தி என்ற இடத்தில் நடைபெறும் நாராயண குரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் பங்கேற்கிறார். எனவே உங்களுடைய நிகழ்ச்சி யில் பங்கேற்க முடியாது என முதல்-மந்திரி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் பிரமுகரான அனிலுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் செம்பழந்தியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு சேந்தி வழியாக காரில் சென்றார். இதனை அறிந்த அனில் உள்பட சிலர் சேர்ந்து திடீரென முதல்-மந்திரியின் காரை வழிமறித்தனர். உடனே முதல்-மந்திரி வி.டி.சதீசன் காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது எங்களுடைய நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எப்படி செல்லலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட் டுள்ளனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி அவசர, அவசரமாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகாரியம் போலீசார் வழக்குப்பதிந்து அனிலை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 6 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதே சமயத்தில் கட்சியின் உட்கட்சி பூசலால் நான் கைது செய்யப்பட்டுள்ளதாக அனில் குற்றம்சாட்டினார். மேலும் அனிலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி மாநில தலைவர் சன்னி ஜோசப் அறிவித்துள்ளார். மாநில தலைமையின் முடிவுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/congress-functionary-arrested-for-intercepting-kerala-chief-ministers-car




