சென்னை, தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி. ஒன்று மின்வெட்டு. மற்றொன்று அரிவாள் வெட்டு. இதுதான் உங்க மானங்கெட்ட மாற்றமா என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவால யத்தில்கடந்த 15ம் தேதிநடை பெறுவதாக இருந்தது., விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- முதல்-அமைச்சர் தினமும் SHOOTING MODEல்தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, சொல்லிவிட்டு, மக்கள் முன் நடிக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது இதுதான் தவெக ஆட்சியின் வேலை. “அவங்க பாஷையில் சொல்லணும்னா. தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு. “பெரிய அலை அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே அவங்க வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்ட் பண்ணிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்கூட கிடைக்கவில்லை ஆனால் ஏதோ பெரிய அலை அடித்த மாதிரியும். தமிழ்நாடே அவர்கள் வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்டப் பண்ணிட்டு இருக்காங்க. அதிக தொகுதிகளை வென்ற கட்சிக்கும் நமக்கும் வெறும் 17 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். சரியா கணிச்சு செயல்பட்டிருந்தா இந்த தோல்வியே வந்திருக்காது. பெரும்பான்மை இல்லாமல், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் இந்த அரசு அமைந்துள்ளது. திருப்பி கொடுப்போம். “நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம். சீக்கிரமா வரோம். திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்” 'எவனுக்கும் தகுதியில்லை' “என்னுடைய மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை. பேரவையில் எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளை டைவர்ட் செய்ய அவதூறுகளை பரப்புகிறது தவெக அரசு" கொளத்தூர் மக்களுக்குக் கோடான கோடி நன்றி கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்; நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்த்திருப்பீர்கள்; நல்லவேளை இந்த கொடுமையை எல்லாமல் பார்க்காமல் இருந்ததற்கு. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/one-is-a-power-cut-the-other-is-a-sickle-cut-mk-stalin




