கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு ஆட்சியமைத்தபின், மாநிலத்தில் இயங்கும் முஸ்லிம் மதப்பள்ளிகளான மதரசாக்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக அங்கீகாரம் பெறாத மதரசாக்களை கண்டறியும் நோக்கில் முதல்-மந்திரி சுவேந்து அதிகாரியின் வழிகாட்டுதல் பேரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பல மதரசாக்கள் போதிய ஒப்புதல்களை பெறாமலும், உள்கட்ட மைப்பு வசதிகள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அத்தகைய 252 மதரசாக்களை மூட மாநில அரசு உத்த ரவிட்டு உள்ளது. மேலும் 100 மதரசாக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன. அவை வழங்கும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி சுதிராம் துடு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/government-orders-closure-of-252-madrasas-in-west-bengal




