மதுரை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோறி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைபாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளிக்க கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை வரும் 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/disciplinary-action-against-three-government-officials-regarding-the-thoothukudi-firing-incident-tamil-nadu-governments-reply-in-court




