சென்னை, பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் மற்றும் அவரது கணவர் ஜோமோன் ஜோசப் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தைக்கு 'கியாரா ஜோசப்' என்று பெயரிட்டுள்ளனர். மகிழ்ச்சியை பகிர்ந்த ரெபா இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை ரெபா மோனிகா ஜான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தனது மகள் ஜூலை 22-ம் தேதி பிறந்ததாக நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். காதலித்து திருமணம் ரெபா மோனிகா ஜானும், ஜோமோன் ஜோசப்பும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 'பிகில்' மூலம் பிரபலமான ரெபா தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரெபா மோனிகா ஜான், தமிழில் நடிகர் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். வாழ்த்து தற்போது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரெபாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/its-a-baby-girl-for-actress-reba-monica-john-shares-adorable-photos




