தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்பட்டு வந்த இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் நிலத்தடியில் நீர் தேங்கி கட்டிடத்தின் அடித்தளம் பலவீனமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த இடிபாடுகளுக்குள் 15 முதல் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, டெல்லி மாநகராட்சி (MCD) மற்றும் சிவில் டிஃபென்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இடிந்து விழுந்த கட்டடம் NDRF அமைப்பின் 70 வீரர்கள் மற்றும் மோப்ப நாய் படைகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் இடிபாடுகளுக்கு இடையே இறக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் சிலர் தங்களது செல்போன்கள் மூலம் உதவி கேட்டு அழைத்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீட்கப்பட்டவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவருக்குக் கை, கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரேகா குப்தா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்டட உரிமையாளர் ஹரிராம் மற்றும் சிலர் மீது முறையற்ற பராமரிப்பு மற்றும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/accidents/six-students-died-when-a-five-story-building-where-they-were-staying-collapsed-in-delhi



