சென்னை, இந்தியாவின் முதன்மையான முதல்தர கிரிக்கெட்டில் ஒன் றான துலீப் கோப்பை போட்டியில், 63-வது சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுக்கு பிறகு கோப்பையை தட்டிச் சென்றது. இதற்கு முன்பு 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளிலும் வென்றிருந்தது. கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதுடன் ரூ.50 ஆயிரம் பரிசையும், தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய ரூ.2.5 லட்சத்தையும் பரிசாக பெற்றனர். தோல்வி தொடர்பாக தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா கூறுகையில் 'முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அதே சமயம் இந்த போட்டியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். நிச்ச யம் அடுத்த முறை இன்னும் வலுவாக மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.உண்மையை சொல்ல வேண்டுமெனில் முதல் நாளில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல் பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் 708 ரன்கள் குவித்த போதே. ஆட்டத்தை ஏறக்குறைய முடித்து விட்டார்கள். அவ்வளவு பெரிய ஸ்கோரை விரட்டிப்பிடிப்பது மிகவும் கடினம் என் பதை அனைவரும் அறிவர். ஒரு வேளை நாங்கள் 3 நாட்கள் விளையாடி இருந்தால் அதை எட்டியிருக்கலாம். அவர்களது பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதத்தை பாராட்டியாக வேண் டும். அவர்கள் எங்களை முழுமையாக வெளியேற்றி விட்டார்கள்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/we-could-have-performed-even-better-tilak-varma




