சென்னை, சென்னை போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு மாயமானாள். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களின் பக்கத்து வீட் டில் வசித்த, தஷ்வந்த் என்ற வாலிபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்குத் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கி யது.இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், தாயை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார். பல கட்ட தேடுதல் நடவடிக்கைக்கு பின் கைதான தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு கடந்த 2018-ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தூக்கு தண்டனையை ரத்து செய்து தஷ்வந்தை விடுதலை செய்தது. முன்னதாக தாய் கொலை வழக்கிலும் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பா.கருணாகரன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dashwanth-acquitted-in-girls-murder-case-tamil-nadu-government-files-petition-seeking-review-of-the-verdict




