சென்னை, மிஷன் ஒலிம்பிக் 2036 திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் இலக்கு 2036 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இப்போட்டியில் உள்ளன. இந்த சூழலில் 2036 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் குறைந்தது 15 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சிறப்பு அதிகாரி நியமனம் இந்நிலையில் தமிழகத்தில் விளையாட்டு மேம்பாடு மற்றும் நீண்டகால திட்டமிடலை ஒருங்கிணைக்க, மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணை முதன்மை செயல் அலுவலராகவும் மயில்வாகனன் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/mayilvahanan-ips-appointed-as-special-officer-for-the-mission-olympics-2036-scheme




