மும்பை, மும்பை தாராவியை சேர்ந்த கணபதி மண்டல் அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு வந்த 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை சரிந்து 2 வாலிபர்கள் காயமடைந்தனர். 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை மும்பை தாராவியை சேர்ந்த கணபதி மண்டல் அமைப்பினர், 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை வித்யாவிகாரில் இருந்து தாராவிக்கு ஊர்வலமாக நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் கொண்டு வந்தனர். 2 வாலிபர்கள் காயம் ஊர்வலம் குர்லா மேற்கு எல்.பி.எஸ். சாலையில் உள்ள சீத்தல் தலாவ் பகுதியை அடைந்தபோது, பீடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. இதில் சிலை உடைந்து சேதம் அடைந்தது. சிலை விழுந்ததில், அருகே நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சந்தோஷ் (வயது28), ரோகித்(25) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/mumbai-2-youths-injured-after-ganesha-statue-collapses




