விசாகப்பட்டினம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ப்ராஜெக்ட் 17ஏ' ரகத்தை சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான 'மகேந்திரகிரி' (F38), இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவில் இன்று விசாகப்பட்டினத்தில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் (INS) மகேந்திரகிரி போர்க்கப்பலை, விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மகேந்திரகிரி இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மும்பை மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனத்தால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது ‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல். கடல்சார் நடவடிக்கை எதிரி நாட்டு ரேடார்களின் கண்களில் மண்ணை தூவி, மறைந்திருந்து தாக்கும் அதிநவீன தொழில்நுட்பம், எதிரிகளின் பலத்த தாக்குதல்களையும் தாங்கி நிற்கும் அபார திறன், குறைந்த ரேடார் தெரிவுநிலை மற்றும் தானியங்கி செயல்பாடுகள் ஆகிய அதிநவீன அம்சங்களுடன் இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. வான்வழி, கடல் பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் என போரின் அனைத்து பரிமாணங்களிலும், முழு அளவிலான கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது." உள்நாட்டு தயாரிப்பு 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு தயாரிப்பு அம்சங்களைக் கொண்டுள்ள ‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல், தற்சார்பு இந்தியா திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குச் சான்றாகத் திகழ்கிறது. சர்வதேச அளவில் இந்திய கப்பல் கட்டும் துறையின் அபார வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. மிகப்பெரிய பலம் வான்வழி தாக்குதல், கடல்மேற்பரப்பு சவால்கள், கடலுக்கு அடியில் பதுங்கியிருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் என அனைத்து தரப்பு எதிரிகளையும் துவம்சம் செய்யும் மிரட்டலான ஆற்றலை ‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் வார்பேர் (மின்னணு போர்முறை) அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளதுதான் இதன் மிகப்பெரிய பலம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/state-of-the-art-ins-mahendragiri-warship-dedicated-to-the-nation




