புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரான் போர் தொடங்கியதற்கு மிக முக்கிய காரணம் - இஸ்ரேல். இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால்தான், ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது. அதன் வழியாகப் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது உலக நாடுகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஈரானின் இந்தத் தாக்குதலைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் தொடங்கியது. இப்படி ஈரான் போரின் முற்றுப்புள்ளி காற்புள்ளியாக மாறியது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து `சதுரங்க வேட்டை' ஆடும் அமெரிக்கா, ஈரான் - பின்னணி என்ன? இப்படியான சூழலில், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இஸ்ரேல் குறித்து பேசியுள்ளார். "இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சிலர், தங்களது தற்போதைய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்பதற்காகவே, எங்களை இந்த அமைதிக் கொள்கையிலிருந்து திசைதிருப்ப தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தப் போரை எவ்வித காலவரையுமின்றித் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக, அமெரிக்கப் பொதுமக்களின் கருத்தை மாற்றியமைக்கவும், அதில் முறைகேடுகள் செய்யவும் அவர்களின் நிர்வாகத்திற்குள் சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். மீண்டும் சொல்கிறேன், இது எந்தவொரு குறிப்பிட்ட இலக்கையும் நோக்கியது அல்ல, வெறுமனே போரைக் காலவரையுமின்றி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யப்படுகிறது." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/jd-vance-says-some-in-israel-want-to-prolong-iran-war




