சென்னை, ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஊக்கத்தொகைக்காக முதல்-அமைச்சர் விஜய்க்கு கமலினி நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பை எனது அம்மாதான் என்னிடம் முதலில் சொன்னார்கள். கேட்டதும் ரொம்ப சந்தோசம். முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி. புதிதாக அவர் வந்துள்ளார். அவர் விளையாட்டுக்காக நிறைய விஷயம் பண்ணுகிறார். என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/indian-womens-team-player-thanks-chief-minister-vijay




