டர்பன், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. டெம்பா பவுமா 30 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 27 ரன்னும் எடுத்தனர். மேத்யூ பிரீட்ஸ்கி அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். மார்கோ யான்சென் அவர் 59 பந்தில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.அந்த அணி, 41.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்சேல் மார் 60 ரன்களும், ரெஷா 44 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தோல்வி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மார்ஷ் கூறியதாவது, நான் ஏற்கனவே கூறியது போல, தென் ஆப்பிரிக்கா எங்களை முழுமையாக வீழ்த்திவிட்டது. கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்துவிட்டனர். நாங்கள் நெருக்கமாக வந்தோம். ஆனால் இன்று இரவு இலக்கை எட்டுவதில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டோம். தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் ரன்கள் எடுக்க சிரமப்பட்ட நிலையிலும், கிட்டத்தட்ட 300 ரன்களை எட்டியது குறித்து எங்களுக்கு தெரியும். பொதுவாக அவர்கள் இப்படித்தான் விளையாடுவார்கள். 50 ஓவர்களிலும் பொறுமையாக விளையாடி, கடைசி 10 முதல் 15 ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவிப்பார்கள். அந்த நேரத்தில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்தோம். ஆனால் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. குறிப்பாக மார்கோ யான்சன் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அந்த குறுகிய பவுண்டரி எல்லையை பயன்படுத்தி அவருக்கு பந்துவீசுவது கடினமாக இருந்தது. அவருக்கு உரிய பாராட்டுகளை வழங்க வேண்டும். அந்த ஆடுகளத்தில் தென் ஆப்பிரிக்காவை 300 ரன்கள் வரை கொண்டு சென்றது சிறப்பான ஆட்டம். இலக்கை நோக்கி விளையாடும்போது தேவையான ரன் விகிதத்தை குறைத்துவிட்டோம். அதன்பிறகு முக்கியமானது நல்ல கூட்டணிகளை அமைப்பதுதான். இதுபோன்ற தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த போட்டியில் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், இந்த ஆட்டத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை பயன்படுத்தி முன்னேறி தொடரை 1-1 என சமன் செய்ய முயற்சிப்போம்.டர்பனில் இருந்து ஜோகன்னஸ்பர்க் செல்கிறோம். அங்குள்ள ஆடுகளம் தற்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து எனக்கு சற்று உறுதியாக தெரியவில்லை. அங்கு விளையாடி நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் பேட்டரை பொறுத்தவரை, அங்கு பந்து நன்றாக வேகமாக செல்லும் என்பது எனக்கு தெரியும். இப்போது நான் பந்துவீசுவதில்லை என்பதால், அங்கு சென்று விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/defeat-against-south-africa-what-did-marsh-say




