சென்னை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வெண்கலப் பதக்கம் ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரணிகாவின் சாதனைப் பயணம் தொடரட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-congratulates-tamil-nadu-athlete-who-won-bronze-medal-at-asian-games




