தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் 28ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஹாய்’, ‘ஒன்ஸ் மோர்’, ‘கராத்தே பாபு’ மற்றும் ‘அமரம்’ ஆகிய நான்கு முக்கியத் திரைப்படங்கள் நாளை ஒரே நாளில் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகின்றன. ஆக்ஷன், காதல், காமெடி மற்றும் த்ரில்லர் என அனைத்து வகையான கதைகளும் இதில் அடங்கியுள்ளதால் பாக்ஸ் ஆபீஸில் பலத்த போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஹாய்’ - கவின் & நயன்தாரா இளமைத் துள்ளல் மற்றும் பீல்-குட் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஹாய்’. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக நடித்துள்ளனர். ஒரு நடுத்தர வர்க்க இளைஞனுக்கும், அவனது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறான ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டது இக்கதை. ஜென் மார்ட்டின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கத் தயாராகியுள்ளது. ‘ஒன்ஸ் மோர்’ - அர்ஜுன் தாஸ் & அதிதி சங்கர் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. வழக்கமான தனது தீவிரமான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி, அர்ஜுன் தாஸ் இதில் காதல் நாயகனாக களம் இறங்குகிறார். அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். காதலில் ஏற்படும் ஏமாற்றம், மனக்காயங்கள் மற்றும் வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது காதல் வாய்ப்பு ஆகியவற்றை உணர்வுபூர்வமான பாணியில் இத்திரைப்படம் விவரிக்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் டிரெண்டாகி படத்தின் மீதான ஆர்வமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பில் வைத்துள்ளது. ‘கராத்தே பாபு’ -ரவி மோகன் & தவ்தி ஜிவால் ரவி மோகனின் 34-வது படமான ‘கராத்தே பாபு’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் சதிவலைகள், பழிவாங்குதல் மற்றும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் நகர்கிறது. மாஸ் ஆக்சன் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு செம ட்ரீட்டாக அமையும். ‘அமரம்’ - தேஜேஷ் ராஜன் & ஐரா அகர்வால் அருள் கிருஷ்ணன் எழுதி, இயக்கியுள்ள ‘அமரம்’ படத்தில் ஹீரோவாக ராஜன் தேஜஸ்வர் நடித்துள்ளார். மேலும், ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் முக்கிய ரோல்களை ஏற்று நடித்துள்ளனர். அழகான காதலுக்குள் நுழையும் எதிர்பாராத ஆபத்துகளும், அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்ற விறுவிறுப்பான திரைக்கதையோடும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிக்கி மேயரின் இசை இப்படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் விரும்பிகளுக்கு இப்படம் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/movies-releasing-in-theaters-tomorrow-28082026




