நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 20 காசுகள் அதிகரிப்பு நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 535 காசுகளாக (ரூ.5.35) இருந்து வந்தது. இதற்கிடையே நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் அதிகரிக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை தற்போது 540 காசுகளாக (ரூ.5.40) அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து உள்ளது. தேவை அதிகரித்து உள்ளதன் காரணமாக விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-have-risen-by-20-paise-in-four-days




