பெங்களூரு, துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் சோன் அணிக்கு எதிராக களமிறங்கிய ஈஸ்ட் சோன் அணியின் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் சோன் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் சோன் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஈஸ்ட் சோன் அணி பேட்டிங்கை தொடங்கியது. அறிமுக துலீப் கோப்பை போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட முயன்றார். ஆனால், 6 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனும் ஏமாற்றம் இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஈஸ்ட் சோன் அணியின் கேப்டன் இஷான் கிஷனும் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஈஸ்ட் சோன் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. சுதீப், குஷாக்ரா பொறுப்பான ஆட்டம் எனினும், சுதீப் குமார் கராமி மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தற்போது வரை ஈஸ்ட் சோன் அணி 58 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது. சுதீப் குமார் கராமி 139 ரன்களுடனும் ஷபாஸ் அகமது 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆடும் லெவன் ஈஸ்ட் சோன்: இஷான் கிஷன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, அபிமன்யு ஈஸ்வரன், குமார் குஷாக்ரா, சுதீப் குமார் கராமி, விராட் சிங், அனுகூல் ராய், ஷாபாஸ் அகமது, முகமது ஷமி, முகேஷ் குமார், அபிஜித் கே. சர்க்கார். நார்த் ஈஸ்ட் சோன்: ராங்சென் ஜொனாதன் (கேப்டன்), கிஷன் லிங்டோ, ஆசிஷ் தபா, அர்பித் சுபாஷ் படேவாரா (விக்கெட் கீப்பர்), காங்கபம் பிரியோஜித் சிங், ஜோசப் லால்டங்குமா, பைரோய்ஜம் ஜோடின், ஆகாஷ் சௌத்ரி, இம்லிவாடி லேம்தூர், பிஷ்வோர்ஜித் கொங்தோஜம், டெச்சி நேரி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/duleep-trophy-sooryavanshi-kishan-have-poor-start-to-campaign-with-east-zone




