புதுடெல்லி, தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் (பாலய்யா) சண்டைக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, ஈரான் கிண்டல் செய்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடிக்கிறது. எண்ணெய் வழிப்போக்குவரத்தில் உலகளவில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல செயல்படாததால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் இந்த போரானது வான்வழித் தாக்குதல்களால் மட்டுமின்றி சமூக வலைத்தள பதிவுகளாலும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரான் இருப்பது போன்ற ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டு வருகிறார். அதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரான் அண்மைக் காலமாக இந்திய திரைப்படங்களின் காட்சிகளை பயன்படுத்தி டிரம்பை கிண்டல் செய்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாரின் வைரல் மீம் ஒன்றை பயன்படுத்தி டிரம்ப்பை கேலி செய்தது. இந்நிலையில் ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் (பாலய்யா) சண்டைக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து டிரம்ப்பை கிண்டல் செய்துள்ளது. 2023-ம் ஆண்டு வெளியான `பகவந்த் கேசரி' திரைப்படத்தின் 58 வினாடி அதிரடி காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. அதில், நடிகர் பாலகிருஷ்ணா ஒரே சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஏராளமான துப்பாக்கி குண்டுகளை பாதாள சாக்கடையின் மூடியை வைத்தே தடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவுடன், “டிரம்ப் ஈரானை அழித்துவிடுவதாக பேசுகிறார். ஆனால் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத நாடு அல்ல என்பதை அவர் அறிவார். டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் சமீபத்தில் ஹாலிவுட் படங்களை விட பாலிவுட் படங்களையே பார்த்து வருகிறார்கள்” என்றும் பதிவில் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/iran-hits-back-at-trump-with-a-telugu-actor-balakrishna-movie-clip




