சென்னை தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். தமிழக சட்டசபையில், 2026-27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய் அவைக்கு வருகை தந்துள்ளார். அவைக்கு வருகை இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்துள்ளார். பொது பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வாழ்த்து பெற்றார். இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர். பொது பட்ஜெட் தாக்கல் இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து பேசி வருகிறார். இரண்டு மடங்கு அப்போது அவர், த.வெ.க.வின் வெற்றி தமிழக மக்களின் வெற்றி. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி நடத்துகிறார். ஊழலற்ற அரசை தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடத்துகிறார். தமிழக அரசின் நிதிச்சுமை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-free-government-tamil-nadu-chief-minister-rules-finance-minister-presents-public-budget




