தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் வீடு தீக்கிரையாகியுள்ளது. கேப்டவுன், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரரான சாட்லெ கிளோஸ் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் உள்பட 4 பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 17 தங்கப்பதக்கமும் வென்று இருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 5 முறை பங்கேற்று இருக்கும் அவர் 7 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 21 பதக்கங்கள் குவித்துள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 34 வயதான சாட் லெ கிளோஸ் 100 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் மெட்லே ரிலேவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டில் அவர் 21-வது பதக்கம் வென்று சாதித்த நாளில் (ஜூலை 30) தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள அவரது வீடு தீக்கிரையானது தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து அவரது வீட்டுக்கும் பரவியதுடன், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/commonwealth-games-swimmer-chad-le-clos-home-was-destroyed-in-a-fire




