பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்பாஸ் காமன்மேன்' நிகழ்ச்சியில் வென்ற போட்டியாளர்கள் பிரபலங்களுடன் இணைந்துப் போட்டியிட இருக்கிறார்கள். முனியம்மாள் அந்தவகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எக்ஸ்க்ளூசிவாகப் பேசிய முனியாம்மாள் (காமன்மேன் போட்டியில் வென்றவர்), " நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். பிக் பாஸிற்கு வருபவர்கள் பெரிய நடிகராக இருந்தால் கூட அவர்கள் எனக்கு சாதாரண மனிதர்களாகத் தான் தெரிவார்கள். அதனால் எனக்கு பயம் எதுவும் இல்லை. இதில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களுக்கு கூட நாம் பேசுவது தவறாகிவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரு காமன்மேனாக இருக்கும் எனக்கு எந்த ஒரு பயமும் இருக்காது, என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவேன். எனக்கு வரும் குறைந்த வருமானத்தை வைத்து வாழ்க்கையில் நான் முன்னேறி காட்டினேன். என்னுடைய சேனலில் பேசியது போன்று இன்னும் நிறைய விஷயங்களை பிக் பாஸில் பேசுவேன். சாதரண வாழ்க்கையை வாழ்பவர்கள் கூட தங்களது அனுபவங்களைச் சொல்லலாம். அந்தவகையில் நான் ஒரு அனுபவசாலி. நான் மிகவும் ஜாலியான நபர். கோபமும் படுவேன் அதேசமயம் ஜாலியாகவும் இருப்பேன். கடந்த சீசனில் பார்வதி அவர்களுக்கு தோன்றியதை செய்தார். ஆனால் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தார். நமக்கு ஆறறிவு கொடுத்திருப்பதே யோசிக்கத்தான். அவர் நிகழ்ச்சி என்பதைத் தாண்டி சில விஷயங்களை செய்தார். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. பார்வதி என்ன இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று தோன்றியது. அதனால் எப்படியாவது நமக்கு முகம் தெரிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நல்ல கருத்துக்களைப் பேசி நல்ல முறையில் நான் வெளியில் தெரிய வேண்டும்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/television/bigg-boss-common-man-munniyammal-sharing




