தவெக அரசு கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. மகளிருக்கு மாதம் ரூ.2,500, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 4 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளை தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இருந்தது. எனவே, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த, மக்கள் எதிர்பார்த்த முக்கிய இலவச திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளும் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று விமர்சித்து வரும் நிலையில், படிப்படியாக திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மரிய வில்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக மரிய வில்சன், “மாநிலத்தின் நிதி நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் கவனம் செலுத்தப்போவது இல்லை. நிதி நிலையை சீராக்கியபிறகு படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/when-will-election-promises-be-fulfilled-finance-ministers-clarification




