திருவனந்தபுரம், கேரளம் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை தொடங் கியது. ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கேரளத்தில் கனமழை கோடைக்காலம் போல் அங்கு வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திய எல் நினோ தாக்கத்தால். இந்த வருடம் கேரளத்திலும் மழை பொய்த்து, கடும் வறட்சியை சந்திக் குமோ? என்ற அச்சம் விவசாயிகள், மக்களிடம் நிலவியது. இந்தநிலையில் அரபிக்கடலில் நிலவிய புதிய காற்றழுத்தத்தால் 3 நாட்கள் கேரளம் மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய கொட்டி தீர்த்தது. 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மேலும் கனமழை காரணமாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது 2 நாட்கள் 204.4 மி.மீ மழை பொழியும் என அறிவித்திருந்தது. அதன்படி பெய்த பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பம்பை கரையோர பகுதிகளான பத்தனம்திட்டா, ரான்னி, ஆரன்முளா மற் றும் ஆலப்புழை மாவட்டத்தில் செங்கன்னூர் பகுதியில் சில இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில், கேரளத்தில் கனமழை நீடித்து வருவதால், பத்தனம்திட்டா, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, கோட்டயம், திருச்சூர், மலப்புரம் மாவட்டங்கள் மற்றும் செங்கனூர், குட்டநாடு தாலுகாக்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 8 பேர் பலியானதாகவும், 13 பேர் காயமடைந்ததோடு மேலும் 8 பேர் காணாமல் போனதாக கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/holidays-for-schools-and-colleges-in-9-districts-of-kerala-tomorrow




