சென்னை, ‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ தியேட்டரில் இந்தப் படத்தை நேற்று காலை 11:30 மணிக்கு பார்ப்பதற்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் தியேட்டருக்கு வந்தபோதுதான், 'ஸ்பைடர்மேன்' இரவு 11.30 தான் திரையிடப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகிகளிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். அப்போது செல்போன் செயலியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது 'ஜனநாயகன்' படம் திரையிடப்பட இருக்கிறது வேண்டுமானால் அந்த படத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது. டிக்கெட் முன்பதிவு செய்த படத்தை பார்க்க முடியாத ஆத்திரத்தில் மாணவர்கள் தியேட்டர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்குள் முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்கும் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/online-ticket-booking-confusion-students-protest-chennai-theatre




