சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றன. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்கிற முறையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு விழா போட்டிகளைத் தொடங்கி வைத்துள்ளார். விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. லோகேஷ் தமிழ்செல்வன் இதில் முன்னாள் மாணவர்கள் அணி சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சக நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென கயிறு அறுந்ததால் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டுப் பதறிய காவலர்கள், உடனடியாக அவரை தூக்கியுள்ளனர். இதில் காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்பதால் மீண்டும் விளையாட்டு விழா போட்டிகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அமைச்சர் நிலைத்தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/minister-lokesh-tamilselvan-fell-down-in-private-school-function




