தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில், மத்திய பிரதேசத்தை வீழ்த்தி ஓடிசா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பறியது. கோவை, 16-வது தேசிய ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி, கோவையில் உள்ள மாநகராட்சி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு. கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, பஞ் சாப், டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த இறு திப்போட்டியில் ஒடிசா- மத்தியபிரதேச அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பறியது. ஒடிசா அணியில் மந்தீப் (2-வது நிமிடம்), தீபக் (45-வது நிமிடம்) கோலடித்தனர். மத்திய பிரதேச அணியில் சோஹைல் அலி (37-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6-3 என்ற கோல் கணக் கில் ஜார்கண்ட்டை தோற்கடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவிதேஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினர். தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். Podium set! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/hockey/national-junior-hockey-odisha-team-defeats-madhya-pradesh-to-become-champions




