சென்னை, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தை சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவர். நேருவின் முதல் மந்திரி சபையில் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக, இருந்தவர். பாரதிய ஜன சங்கம் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர், லியாகத்,நேரு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1950 ஏப்ரல் 6-இல் மந்திரி பதவியிலிருந்து விலகினார். பின்னர், 1951-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் 'பாரதிய ஜன சங்கம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் அர்ப்பணிப்பும், தியாகமும் நமக்கு வழிகாட்டியாக திகழும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கருத்தரங்கம் பாரதத்தின் தலைசிறந்த தேசபக்தரும், சிறந்த சிந்தனையாளரும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், நங்கநல்லூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் இன்று கலந்து கொண்டேன். அர்ப்பணிப்பு, தியாகம் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பும், தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டியாக திகழும். இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தலைசிறந்த தேசபக்தரும், சிறந்த சிந்தனையாளரும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், நங்கநல்லூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் இன்று கலந்து கொண்டேன். டாக்டர்… — Dr.L.Murugan (@DrLMurugan) July 5, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/shyama-prasad-mukherjees-dedication-and-sacrifice-will-serve-as-a-guiding-light-for-us-l-murugan




