பிக் பாஸ் தொடக்க விழா நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8 மற்றும் 9-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 10வது சீசன் துவங்க இருக்கிறது. தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ் தமிழ்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஒன்பதாவது சீசனில் தனது தனித்துவமான பேச்சாலும், எதார்த்தமான அணுகுமுறையாலும் ரசிகர்களைக் கவர்ந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இந்த மைல்கல் சீசனையும் தொகுத்து வழங்க மீண்டும் களம் இறங்குகிறார். புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது. பிரம்மாண்ட தொடக்க விழா ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா தற்போது தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடக்க விழாவிலேயே ஒரு அதிரடியான திருப்பமாக, அறிமுக நிகழ்ச்சி மேடையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் தொடக்க விழாவில் அனைத்துப் போட்டியாளர்களும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்பிறகு நேராக பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை இந்த நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லட்சுமி பிரியா நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், நடிகைகள் லட்சுமி பிரியா, ஷாத்திகா, ஷப்னம் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதன்படி, மேடையில் இருந்தபடியே பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், அதிக வாக்குகளைப் பெற்ற லட்சுமி பிரியா முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். இரண்டாவதாக அதிக வாக்குகளைப் பெற்ற ஷாத்திகா உள்ளே செல்ல ஷப்னம் குறைவான வாக்குகளைப் பெற்று அறிமுக மேடையிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்டிற்குள் செல்லப் போவது யார்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/bigg-boss-season-10-first-contestant-to-be-eliminated-on-stage




