சானந்த் (குஜராத்), குஜராத்தின் சானந்த் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள CG Semi OSAT ஆலையில் தயாரிக்கப்படும் சிப்புகள், வாகனங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அவற்றில் கணிசமான பகுதி ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். செமி கண்டக்டர் துறை இதுதொடர்பாக இந்த ஆலையின் திறப்பு விழாவில் அஷ்விணி வைஷ்ணவ் பேசியதாவது:- உலகளவில் போட்டியிடக்கூடிய செமி கண்டக்டர் (semiconductor) துறையை உருவாக்குவதிலும், மேம்பட்ட சிப் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதிலும் இந்த ஆலை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. உலகளாவிய அங்கீகாரம் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் சிப்புகள் கார்கள், ஸ்கூட்டர்கள் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும். மிக முக்கியமாக, இந்தியாவில், இந்த ஆலையில் தயாரிக்கப்படும் சிப்புகள் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்திய தொழில்நுட்பம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் சில்லுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் பயன்பாடுகளைக் கண்டறிவதன் மூலம், உலகளாவிய செமி கண்டக்டர் மதிப்பு சங்கிலியில் இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக உருவெடுத்துள்ளதை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது. நாட்டில் ஒரு செமி கண்டக்டர் உற்பத்தி சூழலமைப்பை நிறுவுவதற்கான மத்திய அரசின் முயற்சியே இந்த சாதனைக்கு காரணம். பிரதமரின் முயற்சிகளே இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/chips-manufactured-at-gujarats-cg-semi-osat-plant-to-be-exported-to-japan-us-europe-ashwini-vaishnaw




